Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தயாநிதி மாறன் பேச்சு- இந்தியா கூட்டணியில் கொந்தளிப்பு-பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடும் சாடல்!
    இந்தியா

    தயாநிதி மாறன் பேச்சு- இந்தியா கூட்டணியில் கொந்தளிப்பு-பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடும் சாடல்!

    adminBy adminDecember 24, 2023No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் வந்து கழிவறை கழுவுகின்றனர் என திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பேசிய பேச்சு “இந்தியா” கூட்டணியில் கடும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த பேச்சை பாஜக திரித்து, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்வோம் என பேசியதாக பரப்பியது. இது வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து வட இந்திய மாநிலங்களை திமுக எம்பி செந்தில் குமார், கவ் மூத்ரா மாநிலங்கள் என நாடாளுமன்றத்தில் விமர்சித்தது சர்ச்சையானது. இதனை திமுக தலைமையே ரசிக்காததால் உடனே செந்தில்குமார் எம்பி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில் டெல்லியில் 19-ந் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், டிஆர் பாலு எம்பி ஆகியோர் இந்தி மொழி பெயர்ப்பை கேட்டதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்தி தான் தேசிய மொழி; இது இந்துஸ்தான் என்றெல்லாம் ஆவேசப்பட்டார் நிதிஷ்குமார்.

    இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜக தலைவர்களுடன் சேர்ந்து “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்களே தயாநிதி மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Post Views: 221
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.