ஒமியட் என்னும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்தோம்.
சிறுபான்மை பள்ளிக்கூடங்கள் தொடர்பான சிறுபான்மை மொழி தேர்வுகள், சிறுபான்மை சான்றிதழ் வழங்குவது, சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தோம். ஆக்கபூர்வமான பதில்களை அமைச்சர் அளித்தார்.
ஒமியத் அமைப்பின் இணை செயலாளர் பேராசிரியர் கமால் அப்துல் நாசர், பொருளாளர் முஹம்மது கத்தீப், நையீம், இக்பால் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
பள்ளிக்கல்வி இயக்குனரும் இச்சந்திப்பில் உடனிருந்தார்
மனநிறைவான சந்திப்பு என தெரிவித்துள்ளனர்.


