வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்த நாளை முன்னிடடு மதுரை பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், எம்.எல்.ஏ தளபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறுகையில் “வீரபாண்டிய கட்டபொம்மன் நாடு சுதந்திரம் அடைய வேண்டுமென உணர்வோடு போராடினார், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தலைவர்களுக்கு கலைஞர், மு.க.ஸ்டாலின் மரியாதை கொடுத்து வருகிறார்கள், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை அமைத்து நிரந்தர நினைவிடம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர், சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலை அமைத்துக் கொடுத்திருக்கிறார், வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தை போற்றும் விதமாக பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறோம், சமுதாய மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும்” என கூறினார்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை அமைத்து நிரந்தர நினைவிடம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர் என மதுரையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் பேட்டி
Related Posts
Add A Comment


