Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » விமானத்தில் இருந்து விழுந்த “ஐபோன்” 16,000 அடி உயரம்.. ஒன்னும் ஆகலையே.. வியந்து போன நெட்டிசன்ஸ்
    உலகம் செய்திகள்

    விமானத்தில் இருந்து விழுந்த “ஐபோன்” 16,000 அடி உயரம்.. ஒன்னும் ஆகலையே.. வியந்து போன நெட்டிசன்ஸ்

    adminBy adminJanuary 16, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென அதன் கதவு அப்படியே பெயர்த்துக் கொண்டு பறந்துள்ளது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் ஏர்போர்ட்டில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. நடுவானில் அந்த கதவு பறந்த நிலையில், அருகே இருந்த இருக்கை ஒன்றும் பறந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த இருக்கையில் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. விமானத்தின் ஜன்னல் பறந்து விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உடையாமல் இருந்த ஐபோன்: அதில் விமானத்தின் பின்புற மிட் கேபின் கதவு சுவருடன் அப்படியே பெயர்ந்துள்ளது தெரிகிறது. உலக அளவில் விமான பயணிகள் மத்தியில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் ஒன்று உடையாமல் அப்படியே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சேனதன் பேட்ஸ் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், பேரன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஐபோன் ஒன்றை கண்டெடுத்தேன். இந்த ஐபோன் பிளைட் மூட் ஆக்டிவேஷனில் இருந்தது. 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் அப்படியே உள்ளது. இது குறித்து விமான விபத்துக்கள் தொடர்பாக விசாரிக்கும் என்.டி.எஸ்.பிக்கு தெரிவித்த போது, கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது போன் என்று கூறினார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

    நெட்டிசன்கள் கருத்து: இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் கீழே விழுந்தது எந்த மாடல் ஐபோன் என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், நான் எனது பாக்கெட்டில் இருந்து கீழே போட்டால் கூட போன் உடைந்து விடுகிறது. ஆனால், இது 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையவில்லை.. நல்லதுதான்” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இதுதான் ஏர் டிராப் என பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு நெட்டிசனோ ஒருபடி மேலே போய், ஆப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டீம் தற்போது இதை வைத்து விளம்பரம் எப்படி செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் இருக்கும் எனக் கூறியுள்ளார்

    Post Views: 241
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    போர் சூழல்; வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் கொண்டாட்டம்

    March 21, 2026

    ஈரான் மீதான தாக்குதலில் அந்நாட்டு உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும்,இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.

    March 1, 2026

    புதின் வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்… வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்திய ரஷியா

    January 1, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (388)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.