Homeஇந்தியாபவதாரிணியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பவதாரிணியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பவதாரிணியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தேன்” என்றார்.

Must Read