இந்நிகழ்ச்சியில் மேலாண்மைத்துறையைச் சேர்ந்த 126 மாணவியர்களும் பங்கேற்றனர். மேலாண்மைத்துறை தலைவர் மற்றும் துணை முதல்வர் சுசிலாசங்கள் வரவேற்புரை ஆற்றினார்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், தலைமையேற்று தலைமையுரையாற்றினார். உபதலைவர் .கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், , பொருளாளர் .பழனியப்பன், ஆகியோர்கள் முன்னிலையுரை ஆற்றிணர்கள்.
கல்லூரியின் செயலாளர் .காசிபிரபு. துவக்க உரையாற்றினார். இணைச்செயலாளர் .அருண், செண்பகராஜன்,கல்லூரியின் முதல்வர் ..சித்ரா துணை முதல்வர்கள் கோமதி சரணியா உமாகாந்தி முனைவர் கிருஷ்ணவேணி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரிச் செயலாளர் .காசிபிரபு சர்வதேச கருத்தரங்கத்தின் புத்தகத்தை
வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் மேலாண்மைத்துறையின் முன்னால்
மாணவியர்களை கவரவப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கமலாதேவி பாஸ்கரன் நிகழ்ச்சித் தலைவர் எம்பிஏ & இஎம்பிஏ அமிட்டி பிசினஸ் ஸ்கூல், அமிட்டி யுனிவர்சிட்டி துபாய், “சர்வதேச அரங்கில் வணிக இயக்கவியல் வழிசெல்லுதல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில்,
சர்வதேச வணிகம் என்பது பொருட்கள், சேவைகள், தொழில்நுட்பம், மூலதனம் மற்றும் அல்லது தேசிய எல்லைகள் மற்றும் உலகளாவிய அல்லது நாடுகடத்த அளவிலான அறிவின் வர்த்தகத்தைக் குறிக்கிறது என்றுரைத்தார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே பொருட்கள் மற்றும் சேயைகளின் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கிருஷ்ண மூர்த்தி மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியர், கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை, ஈரோடு அவர்கள் “வணிக எல்லைகளை ஆராய்தல், வாய்ப்புகளை கண்டறிதல் மற்றும் சவால்களை சமாளித்தல் ஒரு உலகளாவிய
சாகசம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில்,
சவால்கள் மற்றும் கடினமான நேரங்கள் உங்கள் ஆற்றலையும் மன உறுதியையும் வெளிக்கொணரும், எந்தவொரு சவாலும் அல்லது போராட்டத்தின் விளைவும் எதுவாக இருந்தாலும், உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை வலுப்படுத்தும் புதிய அனுபவங்களையும் படிப்பினைகளையும் நீங்கள் காண்கிறீர்கள் என்று கூறினார்.


