பாஜக தேனி பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா தேனி கருவேல்நாயக்கன்பட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் தேனி பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் , பாராளுமன்ற பார்வையாளர் ரவிபாலா ராஜா, பாராளுமன்ற அமைப்பாளர் ராஜபாண்டியன், பாராளுமன்ற இணை அமைப்பாளர் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெருங்கோட்ட தலைவர் கதலி நரசிங்க பெருமாள் செய்தியாளர்களை சந்திப்பின் போது : தேனி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை. சமூகமாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாங்கள் செயல்படுவோம். தேனி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேம்படுத்த , நிகழ்ந்த போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைப்போம். தேனி மேம்பாலம் விரைந்து கட்டுவதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


