கோவில்பட்டி பகுதியில் 3 மணிநேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை – ரெயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீர் – போக்குவரத்து காவல் எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் பயணித்த வாகன ஓட்டிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக காலையில் அதிக பனியும் ,பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் பரவலாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது மட்டுமின்றி, லேசான சாரல் மழையும் பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்தது. தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காலையில் பள்ளி கல்லூரி சென்ற மாணவர்கள்,, வேலைக்கு சென்று அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த மழையின் காரணமாக கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியது. இருந்தபோதிலும் வாகனஓட்டிகள் ஆபத்தை உணரமால் தேங்கி இருந்த மழை நீரில் பயணித்தனர். போக்குவரத்து காவலர் ஒருவர் எச்சரித்து அறிவுறுத்திய போது வாகன ஓட்டிகள் ரெயில்வே சுரங்க பாலத்தில் பயணித்தனர்.
தொடர்ச்சியாக காலையில் இருந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கயத்தார், கழுகுமலை நாலாட்டின்புதூர்,இனாம்மணியாச்சி, காமநாயக்கன்பட்டி , மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, திட்டங்குளம் பாண்டவர்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது

