சென்னை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகளவில் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரும்பாக்கம் A.B.பிளாக், எண் 22, எழில் நகர், “உன் தேடல் உன்னோடு தான்” மாணவர்களின் பயிற்சி இடத்தில், அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தானியங்கள், கடலை மற்றும் பருப்பு வகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட, ஆரோக்கியம் மிகுந்த சத்துமாவு வழங்கும் விழாவானது நடைபெற்றது.மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதியின் “உன் தேடல் உன்னோடு” கல்வியாளர் திவ்யா சிறப்பாக செய்திருந்தார்.இந்த இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் கீதா, பவானி, மகளிர் அணி பொறுப்பாளர் கீதா , மற்றும் அமுதவல்லி, கலா, இந்திராணி, பேரைச்செல்வி, பிரியா, மைதிலி, சுகுணா மேலும் மாணவரணியின் ராகவன் மற்றும் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


