Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கடுகு சிறுத்தாலும் காரம்
    இந்தியா

    கடுகு சிறுத்தாலும் காரம்

    SahabudeenBy SahabudeenMarch 7, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    குறையாது: அரசு

    டாக்டரான 3 அடி உயர இளைஞர்

    குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு டாக்டராக வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது. ஆனால் அவரது உயரத்தை மட்டும் கணக்கிட்டு, அவர்

    டாக்டராகமுடியாது, அவசர சிகிச்சைகளை இவரால் கையாள முடியாது என்ற காரணத்தை கூறி, 2018ம் ஆண்டு கணேஷிற்கு மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கை மறுக்கப்பட்டது. ஆனால், கணேஷின் பள்ளி முதல்வர் உறுதுணையாக இருந்ததால், ‘குறையுடன் பிறப்பவர்கள் மருத்துவராகக் கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்பி சட்ட போராட்டத்தை ஆரம்பித்தார்.

    இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவரை பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனுமதியும் அளித்தது. இதையடுத்து, பின் 2019இல் கல்லூரியில் சேர்ந்த அவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார்.தற்போது பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

    டாக்டர் கனவு நிறைவேறியது எப்படி என்று அவர் கூறுகிறார், அதில்,

    பிளஸ் 2 முடித்தவுடன், நீட் தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றேன். இவை அனைத்தையும் முடித்து மருத்துவக்கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, எனது உயரத்தை காரணம் காட்டி மருத்துவ கவுன்சில் எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.

    இந்த உயரத்தில் இருப்பதால், அவசர சிகிச்சைக்கு வருபவர்களை எளிதாக அணுக முடியாது, சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதன் பிறகு என்ன செய்யலாம் என, பள்ளி முதல்வர்களிடம் பேசி முடிவெடுத்தேன். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை மந்திரியின் வழிகாட்டுதலின் பெயரில் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றேன். டாக்ராக ஆகப்போகிறேன் என்று பெற்றோரிடம் சொன்னபோது, அவர்களே சந்தேகத்துடன்தான் பார்த்தார்கள். ஆனால், போகப்போக புரிந்துகொண்டனர் என்றார்.

    தொடர்ந்து, முதன்முதலில் என்னை பார்க்கும் நோயாளிகள் சற்று வியப்புடன் பார்த்தாலும், போகப்போக புரிந்துகொள்கிறார்கள். அவர்களது ஆரம்பகட்ட அணுகுமுறையை நானும் ஏற்கிறேன். தொடக்கத்தில் அப்படி இருந்தாலும், போகப்போக அவர்கள் மகிழ்ச்சியாக வந்து செல்கிறார்க்ள் என்று தெரிவித்துள்ளார்.

    சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை நாற்காலி மேல் ஏறி நின்று சிகிச்சை பார்க்கும் டாக்டர் கணேஷை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து வியக்கின்றனர்.

    Post Views: 335
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.