Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » 2026-ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இந்தியா

    2026-ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    SahabudeenBy SahabudeenMarch 13, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரைக்குப் பின்பு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானங்கள் முடிந்துவிட்டன. ஆனால் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீதிமன்றம் வகுக்கும் காலத்திற்குள் விரைந்து கட்டி முடிக்க வேண்டும். கட்டுமான பணியில் உண்மையை மறைத்து பொய் அறிக்கையை வெளியிடும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

    மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு பணி நிறைவடைந்துவிட்டது. 2026-ல் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். மேலும் முழு விவரங்கள் அடுத்த வாரம் கோர்ட்டில் சமர்பிக்கப்படும்” என்று வாதிட்டார். மேலும் மனுதாரர் சம்பந்தமில்லாத அதிகாரிகளை மனுவில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதை பதிவு செய்த நீதிபதிகள், “எதற்காக பிரதமர் மற்றும் முதல்- அமைச்சர் ஆகியோரின் முதன்மை செயலாளர்களை எதிர்மனுதாரர்களாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்?” என கேள்வி எழுப்பினர்.

    பின்னர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து மத்திய நிதித்துறை செயலாளர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கழக இயக்குனர், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    Post Views: 248
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.