உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள்
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவர் நலன் -கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்த நடவடிக்கையால் மின் இணைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதையொட்டி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் அம்மன்புரத்தில் நடைபெற்ற விழாவில் மின் இணைப்புக்கான சான்றிதழ்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும் இக்குடும்பத்தினர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 2001 முதல் 2025 வரை கட்டவேண்டிய நில வாடகை ரூ. 5.90 லட்சத்தை அமைச்சர் தனது சொந்த பணத்தில் செலுத்தினார்.


