Homeஇந்தியாதேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி வி செந்தில்நாதன் கிருஷ்ணராயபுரம்...

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி வி செந்தில்நாதன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி வி செந்தில் நாதன்.கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னாண்டி பட்டி.வீரியபட்டி . காணிகாளம்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அப்போது திரளாக கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மலர் தூவியும் பிரதமர் மோடி அவர்களின் முகமூடி அணிந்து வேட்பாளரை வரவேற்றனர்

இப்போது பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் வி வி செந்தில்நாதன்
இந்த இரண்டா அரை ஆண்டுகளில் பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள் கையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை மலிந்த மாநிலமாக உள்ளது என குற்றம் சாட்டினார்

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்கும் வராத கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தற்போது பொய் வாக்குறுதிகளை கூறியும் பணம் மற்றும் பரிசு பொருட்களை நம்பியும் மக்களை ஏமாற்றி விடலாம் என எண்ணி தேர்தல் களத்தில் உள்ளார்

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தோழமைக் கட்சிகளுடன் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி சாலை வசதி பேருந்து வசதி மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

Must Read

spot_img