திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடலை கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் இவரது மனைவி ராதிகா (44) அதே கிராமம் கொசவன் திடலை சேர்ந்த செல்வராஜ் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி(48) ராதிகா மற்றும் செல்வி இவர்கள் இருவரும் விவசாய கூலிதொழிலாளிகள் இவர்கள் இன்று எட்டுமாந்திடலில் உள்ள சூர்யா என்பவரது வாழை தோட்டத்தில் ஊடுபயிராக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரம் வைக்க இருவரும் நேற்று காலை வேலைக்கு சென்றனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வந்ததால் வாழை தோட்டத்திற்கு மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காது உரம் வைப்பதற்காக செடிகளுக்கு இடையே கையை வைத்த போது. மின்சார வயரை தவறுதலாக பிடித்து விட்டனர் இதனால் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இருவரும் கருகிய நிலையில் இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அருகில் செல்லாமல் உடனடியாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார் மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை நிறுத்தி இருவரையும் சடலமாக மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு உடலுக்கு ஒரு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் உயிரிழந்த ராதிகாவின் கணவர் செல்வராஜ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உடல்நல குறைவால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராதிகா மற்றும் செல்வி ஆகியோர் குடும்பத்தினரை ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களிடம் இச்சம்பவம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்று தருவதாக கூறினார்.


