Homeஇந்தியாமே.வங்க ரயில் விபத்துக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்

மே.வங்க ரயில் விபத்துக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் 3பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே இந்த கோர விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் தானியங்கி சிக்னல்கள் உள்ளன. இரண்டு வழித்தடத்திலும் எப்போதும் ரயில்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான வழித்தடமாக இது உள்ளது. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் தான் இணைக்கிறது. தற்போது ரயில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவ்வழியாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Must Read

spot_img