செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதி காமராஜர் சிலை அருகே மாவீரன் அழகு முத்து கோன் 267 வது குருபூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவருடைய திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தீபம் தனியார் மருத்துவமனை மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவித்தும், ஆட்டோ ஓட்டுனருக்கு சீருடை வழங்கியும், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கியும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், மற்றும் இனிப்பும், அன்னதானமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு யாதவர் குளம் சங்க அமைப்பினர் . சிங்கை கணேஷ் மாநில செய்தித்தொடர்பாளர் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சங்கம் மேற்பார்வையில் நடைபெற்றது. மேலும் விழாவின் சிறப்பு விருந்தினர்கள் போக்குவரத்து ஆய்வாளர் ஹேமந்த் குமார், வட்டார போக்குவரத்து தனி அலுவலர் மஞ்சுளா, திமுக கதிரவன் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இருந்து முக்கிய பிரமுகர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.


