Homeஇந்தியாவந்தே பாரத்’ ரெயிலில் உணவு தரமாக இல்லை பார்த்திபன்

வந்தே பாரத்’ ரெயிலில் உணவு தரமாக இல்லை பார்த்திபன்

இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வருபவர் நடிகர்-இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கி அவரே அதில் நடித்துள்ளார். சமீபத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்டு ‘டீன்ஸ்’ என்ற சாகச் திரில்லர் திரைப்படத்தை உருவாக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அதற்கு உதாரணமாக பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ” வந்தே பாரத் ரெயிலில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்கிய கேடு என சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். அதனால் நான் புகார் புத்தகத்தை வாங்கி அதில் சில கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

Must Read

spot_img