தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்கத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு குலசேகரபட்டிணம் காவல்துறை அனுமதி மறுப்பு
தமிழ்நாடு மக்கள்நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக நீண்ட காலமாக
தீர்க்கபடாத பிரச்னைகள்
கோரிக்கைகளை நிறைவேற்ற சட்ட சார்ந்த
தொடர் முயற்சிகளை இயக்கம் முலமாக செய்து வருகிறோம்
(1)அதில் ஒரு முக்கியமாக கடந்த சில ஆண்டுகளாக
தமிழகம் முழுவதும் சமுகஆர்வலர்கள் தாக்கப்படுவதும் கொலை மிரட்டல் விடுவதும் அதை தாண்டி தற்போது கொலை செய்யும் நிகழ்வும் தமிழத்தில் நடந்து வருகிறது இதை தடுக்க வேண்டும் இதற்கான சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்கத்தின் தொடர் முழக்கம்
(2)மாநில மனித உரிமை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமின்றி
நீதிமன்றத்தில் வழக்கும்
கிடப்பில் போடபட்டுள்ளது
இதில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு நல்கி ஆண்டுகள் கடந்தும் இதுவரை பதில் அளிக்காமல் காலதாமதம் செய்யும் அரசுகள் இதனை விரைவுப்படுத்த வேண்டி
இயக்கத்தின் தொடர் முழக்கம்
(3)தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி
(4)கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் பாதாசாரிகள் வாகன ஒட்டிகள் ஏற்படும் விபத்துகளை நிரந்தரமாக தீர்வுகாண வேண்டி இயக்கத்தின் தொடர் முழக்கம்
(5)பொது சுகாதாராத்திற்கு சீர்கேடுகள் ஏற்படுத்தும்
பன்றிகள் இதனை தடைசெய்ய வலியுறுத்தி
இயக்கத்தின் முழக்கம்
(6)உடன்குடி காலன்குடியிருப்பு அரசு பொது மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்கள் நவீன கருவிகள் அமைக்க வேண்டி வலியுறுத்தி இயக்கத்தின் தொடர் முழுக்கம்
(7)உடன்குடி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள பழைய சுற்றுசுவர்
இடிக்கபட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் அவற்றை சீர் அமைக்க வலியுறுத்தி
இயக்கத்தின் முழக்கம்
இதுபோன்ற நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசின் கவனத்திற்கு கொண்டுச்செல்ல ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி குலசேகரபட்டிணம் காவல்துறை ஆய்வாளாரிடம் அனுமதி
கோரி மனு கொடுத்தது
கடந்த 7/1/2025 நிலையில் 25/1/2025 சனிக்கிழமை மாலை குலசேகரபட்டிணம் காவல்நிலைய அலுவலர் அனுமதி மறுக்கபடுவதாக கூறி சில காரணங்களை பட்டியல் போட்டுள்ளார் ஆய்வாளார்
குலசேகரபட்டிணம் காவல் ஆய்வாளார் அனுமதி கோரி மனு செய்யும் போது நீங்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது தேவையற்றது எனவும்
இது வேறும் கண்துடைப்பு என்றும் பதில் சொன்னார் ஆய்வாளார் அவர்களுக்கு ஜனநாயகத்தில் உச்சபட்சமாக போராட்டம் உண்ணாவிரத என்பதை அவர்களிடம் அழுத்தமாக பதிவு செய்தோம் இதனால்தான் அவர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பிற்கான காரணமாக இருக்கலாம்
நமது இயக்கத்தின் உண்ணாவிரத போராட்டம் கண்டிப்பாக
சட்ட போராட்டத்தின் பிறகு நடைபெறும் அதில் எவ்விதமாக சந்தேகம் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறோம்
கச்சி முகைதீன்
மாநிலபொதுச் செயலாளார்
தலைமை அலுவலகம்
தூத்துக்குடி மாவட்டம்
உடன்குடி


