Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை
    இந்தியா

    பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை

    SahabudeenBy SahabudeenApril 24, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நேற்று முன்தினம், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் முப்படைகளும் தயார் நிலையி இருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையில், கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியாவும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள பதிவில்,”இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை துல்லியமாகக் குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது நமது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் மற்றொரு மைல்கல்லாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Post Views: 170
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (392)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.