Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு..
    இந்தியா

    எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு..

    SahabudeenBy SahabudeenMay 28, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உளவாளியா..? என தீவிர விசாரணை

    நாக்பூர் கபில் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனிதா. இவர் நர்சாக வேலை பார்த்து வந்தார். மேலும் துணி வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கடந்த 14-ந்தேதி திடீரென மாயமானார். விசாரணையில் சுனிதா, 13 வயது மகனுடன் காஷ்மீர் சென்றது தெரியவந்தது.

    மேலும் அவர் மகனை காஷ்மீரில் தவிக்கவிட்டு இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது தெரியவந்தது. அவர் கார்கில், ஹன்டர்மேன் கிராமத்தில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். சுனிதாவை பிடித்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அவரை விசாரணைக்கு பிறகு இந்திய அரசிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்திய அதிகாரிகள் அவரை அமிர்தசரஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

    சுனிதா எல்லையை தாண்டும் முன் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக லடாக் போலீஸ் டி.ஜி.பி. எஸ்.டி. சிங் ஜம்வால் கூறியுள்ளார்.

    இதற்கிடையே நாக்பூர் போலீசார் அமிர்தசரசில் இருந்து சுனிதாவை அழைத்து வர விரைந்துள்ளனர்.

    அவர்கள் சுனிதா பாகிஸ்தானுக்காக உளவு வேலை எதிலும் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இதுகுறித்து நாக்பூர் போலீஸ் துணை கமிஷனர் நிகேதன் கதம் கூறுகையில், “சுனிதா, தனது மகனுடன் நாக்பூரில் இருந்து கடந்த 4-ந்தேதி காஷ்மீர் சென்றுள்ளார். அவர் கடந்த 14-ந்தேதி தனியாக கார்கில் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பிடித்தனர். கடந்த சனிக்கிழமை அவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அவர் அமிர்தசரஸ் போலீஸ் காவலில் உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கநாக்பூரில் இருந்து 2 பெண் போலீஸ் உள்பட தனிப்படை அமிர்தசரஸ் விரைந்து உள்ளது. அவரை நாக்பூர் அழைத்து வந்தவுடன், அவர் உளவு வேலை எதிலும் ஈடுபட்டாரா? அல்லது சட்டவிரோத செயல் எதிலும் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.

    இதேபோல காஷ்மீரில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுனிதாவின் மகனையும் அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே சுனிதா மனஅழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Post Views: 220
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (389)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.