Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » இளம்பெண்ணின் வாயில் வெடிவைத்து கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன் அதிர்ச்சி சம்பவம்
    இந்தியா

    இளம்பெண்ணின் வாயில் வெடிவைத்து கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன் அதிர்ச்சி சம்பவம்

    SahabudeenBy SahabudeenAugust 26, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ரக்ஷிதா (வயது 20). இவருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

    இதனிடையே, ரஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த சித்தராஜு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

    இந்நிலையில், ரக்ஷிதாவும் அவரது கள்ளக்காதலனான சித்தராஜுவும் நேற்று ஹிர்யா கிராமத்தில் உள்ள லாட்ஜிக்கு சென்றுள்ளனர்.

    லாட்ஜில் வைத்து ரஷிதாவுக்கும் சித்தராஜுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த சித்தராஜு தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை ரக்ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச்செய்துள்ளார். இதில், ரக்ஷிதாவின் முகம் முழுவதும் வெடித்து சிதறி அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இதையடுத்து கள்ளக்காதலன் சித்தராஜு அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். அறையில் வெடிசத்தம் கேட்டு லாட்ஜ் ஊழியர்கள் விரைந்து சென்று தப்பியோட முயற்சித்த சித்தராஜுவை பிடித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சித்தராஜுவை கைது செய்தனர். மேலும் லாட்ஜ் அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Post Views: 485
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.