Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » வேறு சாதி ஆணுடன் காதல்… மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று வாயில் விஷத்தை ஊற்றிய தந்தை
    இந்தியா

    வேறு சாதி ஆணுடன் காதல்… மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று வாயில் விஷத்தை ஊற்றிய தந்தை

    SahabudeenBy SahabudeenAugust 30, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியில் உள்ள மேலகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கடந்த வியாழக்கிழமை சங்கரின் 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது.

    இதையடுத்து சங்கரின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.

    இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து சங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது சங்கர் தனது மகளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். சங்கரின் மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சங்கருக்கு தெரியவந்த நிலையில், காதலை கைவிடுமாறு தனது மகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ஆனால் அந்த பெண் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். சங்கருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ள நிலையில், வேறு சாதியை சேர்ந்த ஆணை தனது மகள் காதலிப்பது ஊராருக்கு தெரியவந்தால், மற்ற மகள்களின் திருமணம் பாதிக்கப்படும் என்று பயந்துள்ளார். இறுதியில் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சங்கர், அவரது வாயில் விஷத்தை ஊற்றி, மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊர் மக்களிடம் கூறியுள்ளார்.

    இதனை நம்பி ஊர் மக்கள் சங்கரின் மகளுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் சங்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் சங்கரின் உறவினர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Post Views: 505
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.