கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலைகூடத்தில் பயின்ற மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெங்கலம் பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாணவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.கோவா மாநிலம் காலிகெட் பகுதியில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலைக்கூடத்தில் பயின்ற 12 மாணவர்கள் பயிற்ச்சியாளர் கிறிஸ்டீனா தலைமையில் போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளுடன் நடைபெற்ற போட்டியில் 5 தங்கபதக்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெங்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். சென்னை இரயில் நிலையம் திரும்பிய வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்ச்சியாளர் கிறிஸ்டீனா பேசுகையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலை கூடத்தில் பயின்ற எனது மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று பெருமை சேர்த்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து 300 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கடுமையான போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் அரசு தரப்பில் பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும் அவை செயல் முறைக்கு வரவில்லை எனவே அரசு அனைத்து விளையாட்டிலும் ஊக்கபடுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
