நாசரேத் பகுதியில் கந்தசாமிபுரம் நியாய விலைக் கடையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தொ, பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் 3000 ரூபாய் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் நேற்று ஜனவரி 8ந் தேதி தொடங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நாசரேத்தில் நடந்த விழாவில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி துவங்கி வைத்தார்.இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் திமுக நிர்வாகி ரவி செல்வகுமார், துணைத் தலைவர் தம்பு என்ற அருண் சாமுவேல், மாவட்ட பிரதிநிதி தாமரைச் செல்வன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், சாமுவேல், அதிசயமணி, பிரகாசபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஜெயசிங், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஜெரின், துணை அமைப்பாளர் செல்லப்பா, ஜாண் பென்சன், மகளிர்அணி இந்திராணி, காலனி கண்ணன், நாசரேத் விவசாய கூட்டுறவு வங்கி செயலாளர் முத்து கிருஷ்ணன், நியாய விலைக் கடை விற்பனையாளர்.மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

