Homeஇந்தியாபிரேக் அப் செய்த காதலிக்கு 20 கத்திக்குத்து -அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்

பிரேக் அப் செய்த காதலிக்கு 20 கத்திக்குத்து -அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்

பிரேக் அப் செய்த தனது காதலியை, அவரது முன்னாள் காதலன் 20 முறை குத்தி கொலை செய்திருப்பது அதிர்சிச்யை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாபில் உள்ள மொகாலி என்கிற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் டிம்பிள் என்கிற பெண் ஒருவர், தன்னுடன் வேலை பார்க்கும் ஹர்விந்தர் மான் என்கிற நபருடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு அந்தப் பெண் உறவை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

வழக்கம்போல வேலைக்கு வந்த அந்த பெண்ணிடம், முன்னாள் காதலன் அவரிடம் இருவரின் உறவு குறித்து பேசி பிரச்சனை செய்திருக்கிறார்.கொஞ்ச நேரத்தில் இந்த பிரச்சனை விவாதமாக மாறி இரு தரப்பிலும் கத்தி சண்டை போட ஆரம்பித்திருக்கின்றனர்.பின்னர் தனது மேஜையில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த டிம்பிளை அவரது முன்னாள் காதலன் கத்தியால் பின்னால் இருந்து கத்தியால் குத்தி இருக்கிறார்.தன்னைக்காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த பெண் எழுந்து ஓடுகையில் அவரை விடாமல் பிடித்து இழுத்து அருகில் இருந்த கதவருகே வைத்து சரமாரியாக குத்தியுள்ளார் அந்த காதலன். அருகிலிருந்த ஊழியர்கள் அவரை தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி வீணாகியுள்ளது. டிம்பிளை அவர் 20 முறை குத்தியதால் அவர் அசைவற்று இருந்திருக்கிறார்.

டிம்பிளை குத்திய பின், அந்த நபர் தன் கழுத்திலும் முப்பது முறை கத்தியை வைத்து குத்தி இருக்கிறார். இதற்குள் அருகில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்று இருக்கின்றனர். ஆனால் டிம்பிளைபரிசோதித்த மருத்துவர்கள்அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறிஇருக்கின்றனர். குற்றவாளிஉயிருக்கு ஆபத்தான நிலைஇருப்பதாக கூறிஇருக்கின்றனர்.சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த டிம்பிளின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த பிற தகவல்கள், மேலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img