பாண்டுரங்கனார் நூற்றாண்டு விழாவில் யாதவ சமூகப் பற்றாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் பேராசிரியர் கலைமாமணி டாக்டர் நா. பாண்டுரங்கனாரின் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு யாதவ மகா சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தி.அ. சொக்கலிங்கனார் திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சி மற்றும் 10-ஆம் வகுப்பு 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற யாதவ சமூக மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள தமிழ் அரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு தமிழ்நாடு யாதவ மகா சபையின் மாநில தலைவர் டாக்டர் நாசே ஜே. ராமச்சந்திரன் ஆணைக்கிணங்க பொதுச்செயலாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். தஞ்சை மண்டலத் தலைவர் T.K.G. கண்ணன் முன்னிலை வகித்தார். தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் K. வெங்கடேசன் வரவேற்றார். தொடக்க உரை, மற்றும் தமிழ் தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் பொது மேலாளர் A. ராதாகிருஷ்ணன் யாதவ சமூகத்தின் பெருமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். கதர் V. வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார்விழாவில் பேராசிரியர் கலைமாமணி டாக்டர் நா. பாண்டுரங்கனாரின் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரது சமூகப் பணிகள் மற்றும் தமிழ்நாடு யாதவ மகா சபையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து நினைவுகூரப்பட்டது.தொடர்ந்து, தமிழ்நாடு யாதவ மகா சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தி.ஆ. சொக்கலிங்கனாரின் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கேலக்ஸி R. பாலா அவர்கள் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்நாடு யாதவ மகா சபையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர். யாதவ வாழ்நாள் சாதனையாளர் விருது N.K. கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை இரா. பொன்முடி வழங்கி வாழ்த்தினார். கெழுதகை யாதவர் விருது V. கலியபெருமாளுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை G. கண்ணன் வழங்கினார். தகைசால் யாதவர் விருது இரா. இராமதாசனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை D. தெட்சிணாமூர்த்தி வழங்கி வாழ்த்தினார். யாதவ செம்மல் விருது P. சின்னதுரைக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை R. காயாம்பு வழங்கினார். வீரன் அழகுமுத்துக்கோன் விருது S. ராமந்திரனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை டாக்டர் பா. கதிரவன் வழங்கி வாழ்த்தினார்.இதனைத் தொடர்ந்து 10-ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற யாதவ சமூக மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டப்பட்டனர். மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தும் நிகழ்வில் S. அடைக்கலம், K. செல்வராஜ், டாக்டர் T.S. சத்தியவாணி, S. ஹரிகிருஷ்ணன், V.K. பார்த்தசாரதி, Lion S.K.V. வைத்தியநாதன், G. கணேசன், S. செந்தில்குமார், L. முருகன், G. ரகுபதி, V. பன்னீர்செல்வம், R. பிரபாகரன், M. லெட்சுமணன், J. ஆதவன் சிவாஜி, K. சக்திகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி கல்வி அறிவின் பெருமையை எடுத்துரைத்து பேசினார்விழாவில் தமிழ்நாடு யாதவ மகா சபையின் மாநில, மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள், பல்வேறு சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூகப் பிரதிநிதர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் பா. தரங்கன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் தலைமை மேலாளர், நன்றி கூறினார் செய்தியாளர் அ.மகேஷ்
