தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், சென்ட்ரல் பேங்க் எதிரில் அமைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் அலுவலகத்தில், பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டதுவிழாவில், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத் தலைவர் நீலகண்டன் தேசியக் கொடியேற்றி வைத்து, சுதந்திர தின சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத் தலைவர் சிவகாமி ஜுவல்லர்ஸ் டி. சாமியப்பன் முன்னிலை வகித்து, நாட்டுக்குப் பெருமை சேர்த்த முன்னாள் ராணுவ வீரர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து பேசினார்.ஸ்டார் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பொறியாளர் எம். கனகராஜ் வரவேற்றார்.விழாவில், சங்கச் செயலாளர் பொறியாளர் எஸ். பிரசாந்த், பொருளாளர் எஸ்.எஸ். மைதீன், உறுப்பினர்கள் அ. செந்தில்குமார், ஆசிரியர் எஸ்.டி. திருமுகம், பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் ராணுவ வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.விழாவில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், இனிப்புகளும் வழங்கப்பட்டன.செய்தியாளர் அ.மகேஷ்
