கும்பகோணம் அருகே கொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் இரண்டாவது மண்டல உறுப்பினர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார். கும்பகோணம் தங்கமயில் ஜுவல்லரி மேலாளர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பேனா, கீ செயின், வாட்டர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் காசிநாதன், கீதா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்
