தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள நெய்குப்பை ஊராட்சியில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி சனிக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், திருவள்ளுவர் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ச. கலைமணி தலைமையில் சங்க நிர்வாகிகள் ஆர். சிவானந்தம் எம்.செல்வராஜ் எம். ரவி ஆகியோர் 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருப்பனந்தாள் துனை வட்டார வளரச்சி அலுவலர் ஜவகரிடம் அளித்தனர், அந்த மனுவில், கூறியிருப்பதாவது: நெய்குப்பையில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நலன் கருதி சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும், மின் இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த உத்தரவாதத்தின்படி, விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க உடனடியாக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் நலன் சார்ந்த இக்கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில் திருவள்ளுவர் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.செய்தியாளர் அ.மகேஷ்
