கழகத்தின் கோட்டையாம் திருச்சி மண்ணில், மக்கள் நலன் காக்கும் உரிமை முழக்கம் மீண்டும் ஓங்கி ஒலிக்கிறது!விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வரும் த.வெ.க அரசைக் கண்டித்தும்… காவிரியின் உரிமையை மீட்டெடுக்காமல், மேகதாட்டு விவகாரத்தில் மெத்தனப் போக்கு காட்டும் த.வெ.க. அரசை எச்சரித்தும்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.”மாவட்ட செயலாளர்களுக்கு உற்சாக வரவேற்பு:”இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ப்பாட்டத்திற்கு முன்னோட்டமாக, திருச்சி மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் மற்றும் கள ஆய்வுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.நிகழ்ச்சிக்கு வருகை தந்த கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர். மனோகரன் அவர்கள், மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் T.N. சிவக்குமார் ஆகியோருக்குத் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாகமிக்க, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது!”பங்கேற்ற நிர்வாகிகள்:”இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஓட்டுநர் அணி உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகள், தொண்டர்கள் “நாளை மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகத்தின் தொண்டர்களும், பொதுமக்களும், விவசாயப் பெருமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மக்களின் கண்டனக் குரலை எதிரொலிக்கச் செய்வோம்!
