கும்பகோணம் குடந்தை ரத்ததானம் அறக்கட்டளையின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ரகுராம் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மற்றும் காது மருத்துவ சிறப்பு முகாம் கார்த்திக் வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் கண் மற்றும் காது பரிசோதனை மேற்கொண்டு, அவற்றைப் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினர். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான கண்ணாடிகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.தொடர்ந்து, காது தொடர்பான பிரச்னைகளுக்கும் அதிநவீன மருத்துவக் கருவிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உரிய சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் பரிசோதனை செய்து, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமின் மூலம் பலர் கண், காது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளையும், தேவையான சிகிச்சைகளையும் பெற்றனர். முகாமுக்கான ஏற்பாடுகளை குடந்தை ரத்ததானம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.செய்தியாளர் அ. மகேஷ்
