Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்2028-ல் வரும் மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்துக்கு பக்தர்கள் வருகையை எதிர்கொள்ள ரயில்வே-மாவட்ட நிர்வாகம் ஆலோசனை

2028-ல் வரும் மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்துக்கு பக்தர்கள் வருகையை எதிர்கொள்ள ரயில்வே-மாவட்ட நிர்வாகம் ஆலோசனை

ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகத் திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையை சீராகக் கையாள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.மாசி மாதத்தில் பௌர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணையும் காலத்தில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடைபெறும் புனித நீராட்டு விழா, மகாமகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள இவ்விழாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்துக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையொட்டி, கும்பகோணம் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலாக் ராம் நேகி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆர். ரேவதி ஆகியோர் பங்கேற்று, மகாமக விழாவுக்கான ரயில்வே முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.கூடுதல் ரயில்கள் இயக்கம்:மகாமக விழாவின்போது கும்பகோணத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கூடுதல் ரயில்களை இயக்குதல், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், ரயில் நிலையத்துக்கு அதிகளவில் வரும் பக்தர்களின் வருகை மற்றும் வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பான நடமாட்டத்துக்கு தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.மகாமக விழாவின்போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் திறம்படக் கையாளும் வகையில், ரயில் நிலைய வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.விழாவுக்கு முன்னதாகவே ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தேவையான ஏற்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான, சிரமமற்ற பயணத்தை உறுதி செய்வது குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் கே. எம். சத்தியா ரதன் உள்ளிட்ட மூத்த ரயில்வே அதிகாரிகள், கும்பகோணம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மகாமகத் திருவிழாவுக்கு முன்னதாகவே ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து முன்னேற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், விழா காலத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, பயணிகள் வசதி மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட உள்ளன.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read