Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பயணத்தையே மொத்தமா ரத்து செய்த கமல்.. இன்று ‘அவசர’ கூட்டம்.. திமுக கூட்டணியா இல்லையா? முக்கிய முடிவு!
    இந்தியா

    பயணத்தையே மொத்தமா ரத்து செய்த கமல்.. இன்று ‘அவசர’ கூட்டம்.. திமுக கூட்டணியா இல்லையா? முக்கிய முடிவு!

    SahabudeenBy SahabudeenMarch 7, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் கமல்.

    கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்திற்கு  வைக்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கின்றன.

    கமல் வெளிநாட்டு பயண திட்டம் ரத்து: இந்நிலையில், இப்படத்தின் பணிகளுக்காக அண்மையில் வெளிநாடு சென்று திரும்பினார் கமல்ஹாசன். பிப்ரவரி இறுதியில் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடையாததன் காரணமாக பயணத்தை தள்ளி வைத்தார் கமல்ஹாசன். எனினும் ஒரு வாரம் ஆகியும் கூட்டணி பேச்சு முடிவடையாத நிலையில் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார் கமல்ஹாசன்.

    இயக்குநர் மணிரத்னம் மற்றும் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் தற்போது லொக்கேஷன் பார்ப்பதற்காக செர்பியா சென்றுள்ளனர். கமல்ஹாசனும் செல்ல இருந்த நிலையில், அரசியல் பணிகள் காரணமாக அவர் செல்லவில்லை. கமல்ஹாசன் இடம்பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை

    நடத்திக்கொண்டு மணிரத்னம்

    குழுவினர் நாடு திரும்புவார்கள்

    என தகவல் வெளியாகியுள்ளது.

    திமுக கூட்டணி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் என தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.திமுக கூட்டணியா இல்லையா? எத்தனை சீட்? இழுபறிக்கு மத்தியில் நாளை அவசர கூட்டம் நடத்தும் கமல்ஹாசன்!திமுக கூட்டணியா இல்லையா?கூட்டணியா இல்லையா? எத்தனை சீட்? இழுபறிக்கு மத்தியில் நாளை அவசர கூட்டம் நடத்தும் கமல்ஹாசன்!திமுக கூட்டணியா இல்லையா? எத்தனை சீட்? இழுபறிக்கு மத்தியில் நாளை அவசர கூட்டம் நடத்தும் கமல்ஹாசன்!

    மநீம இன்று ஆலோசனை:

    அதே நேரத்தில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க,மதி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 10 சீட்கள் எதிர்பார்க்கும் நிலையில், திமுக 7 சீட்கள் தர முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசிக 3 சீட்களையும், மதிமுக 2 சீட்களையும் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.

    2 சீட்டில் உறுதியாக இருக்கும்

    கமல்: திமுக உடனான

    பேச்சுவார்த்தையில் மநீம 2 தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், திமுக 1 சீட் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி, டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட கேட்டதாகவும் அதற்கு திமுக தரப்பு உதயசூரியன் சின்னத்தில் போட்டி வேண்டும் என வலிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யம் குறைந்தபட்சம் 2 சீட் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் சென்னை மற்றும் கோவை ஆகிய லோக்சபா தொகுதிகளை மநீம எதிர்பார்ப்பதாகவும், அப்படி 2 சீட் வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.

    இன்று முக்கிய முடிவு: திமுக

    கூட்டணியில், தொகுதிப் பங்கீடு நிறைவு பெறாததால் வெளிநாட்டு ஷூட்டிங்கை கூட கமல்ஹாசன் ரத்து செய்துள்ளார். இந்நிலையில் தான் இன்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில், மநீம தலைவர் கமல்ஹாசன், தேர்தல் நிலைப்பாடு மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Post Views: 246
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.