செங்கல்பட்டு மாவட்டம்… செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளீர் கட்டணமில்லாப் பேருந்து செங்கல்பட்டு பழையபேருந்து நிலையத்தில் நிற்க்காமல் செல்கிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் குழந்தைகளுடன் நின்றிருக்கும் மகளீர் நிற்க்காமல் செல்லும் பேருந்தை போகும் பாதையை வேதனையேடு குழந்தைகளுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளீர்கட்டணம் இல்லாப்பேருந்துகள் புறப்படும் 10 நிமிடத்தில் சுமார் 5 பேருந்துகள் ஓன்றன்பின் ஒன்றாக செல்கிறது.
இப்படி செல்லும் பேருந்துகள் முதலில் செல்லும் இரண்டு பேருந்துகளில் மட்டும் பயணிகள் அதிக அளவில் ஏறிசெல்கின்றனர், பின்னர் வரும் 3 பேருந்துகள் பயணிகள் அதிகம் இல்லாமல் செல்வதால் அரசு அறிவித்த மகளீர் கட்டணம் இல்லா பேருந்து திட்டம் மகளீருக்கு பயன்படாமல் இருப்பதால் இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது..
இதனை கருத்தில் கொண்டு,
இதனை பேருந்து பணிமனை நேரக்காப்பாளர் கருத்தில் கொண்டு இத்திட்டம் மகளீர்க்கு பயண்படும் விதமாக பேருந்தின் நேர அட்டவணையை மாற்றி அமைத்து உதவுமாறு பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


