முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழா…!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகரமன்ற சார்பாக மறைமலைநகர் பாவேந்தர் சாலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி திருவுருவபடத்திற்கு மறைமலை நகர் நகர மன்ற தலைவர் சண்முகம் மற்றும் மலைமேடு கவுன்சிலர் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி இவர்களுடன் மறைமலைநகர் நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன். மலர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். ஏழைகளுக்கு அன்னதானமும்
செய்தனர். இதனை அடுத்து மறைமலைநகர் 11வது வார்டில் நகரமன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஏற்பாட்டில் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்த பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கமலக்கண்ணன்
மற்றும் கட்சி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.


