தேனி மாவட்டம் கூடலூரில் ஒன்றிய அரசின் வக்பு சட்டதிருத்த மசோதா விற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு ஜமாத்துல் சபை சார்பில் பள்ளிவாசல்களில் மின்னஞ்சல் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கடி தத்தை கியூகோர் கோடு மூலம் மொபைலில் பெற்று அதனை ஒன்றிய அரசுக்கு மின்னஞ்சல் செய்தனர். கூடலூர் ஜமாத் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் அப்துல் ரஹிம், பொருளாளர் அமீர்சுல்தான், பள்ளிவாசல் இமாம் சிகாபுதீன், ஹக்கீம், ஷாஜகான், அலியத்தா உட்பட பலர் கலந்துகொண் டனர்.
