Homeஇந்தியாகனமழை காரணமாக பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு நாளை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், நாளை மறுநாள் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதால், அதிக பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க வாய்ப்பு உள்ள நிலையில், வரும் 15, 16,17 ஆகிய தேதிகளில் கூடுதலாக மெட்ரோ ரெயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, சென்னை மெட்ரோ நிர்வாகம், கனமழை நேரத்தில் சென்னை மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை அளிக்கும் வகையில் கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்றும் காலை 8 முதல் 11 மணி வரை பச்சை வழித்தடத்தில் 5 நிமிட இடைவெளியிலும், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read

spot_img