Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » த.வெ.க. அரசியல் கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு உள்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
    இந்தியா

    த.வெ.க. அரசியல் கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு உள்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

    SahabudeenBy SahabudeenNovember 3, 2024Updated:November 3, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27- ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.

    ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார். அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை, உட்கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கட்சியினருடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இறுதியாக, கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

    இந்நிலையில், கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு ரத்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. சாதிவாரி கணக்கெடுப்பு, கால நிர்ணயம் செய்து மதுக்கடைகளை மூடுவது, தமிழக மின் கட்டண விவகாரம் மற்றும் கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    தமிழக ஆளுனரை கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. த.வெ.க. மாநாட்டுக்கு வந்தபோது உயிரிழந்த 6 பேருக்கு இரங்கல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படுகிறது. தமிழக அரசையும், மத்திய அரசையும் வரவேற்று தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு மற்றும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

    தமிழகத்தில் மின்கட்டண வசூலானது, மாதாந்திர கணக்கீட்டு முறையின்படி அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாத சூழல் உள்ளது. இதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

    Post Views: 201
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.