Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்தியா

    டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    SahabudeenBy SahabudeenNovember 13, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதனிடையே அரசு மருத்துவமனையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்து கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டாக்டர் பாலாஜியை, நேரில் சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவருடைய குடும்பத்தினரிடமும், டாக்டர்களிடமும் அவர் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “கடந்த ஜனவரி மாதம் முதல் எனது தாய்க்கு டாக்டர் பாலாஜியிடம் சிகிச்சைக்கு சென்றேன். எனது தாய்க்கு கீமோ சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது தாயின் உடல் நிலை தேறியது. தனியார் மருத்துவமனையில் ஒவ்வொறு முறை சிகிச்சைக்கும் 20 ஆயிரம் வரை செலவானது.

    எனது தாய்க்கு, முறையாக சிகிச்சை அளிக்காத டாக்டர் பாலாஜியிடம் மருத்துவ செலவுக்கான பணத்தை தருமாறு கேட்டேன். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்டர் பாலாஜி என்னை திட்டி கீழே தள்ளினார். அப்போது ஆத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தினேன்” என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் அரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Post Views: 197
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.