Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தூத்துக்குடியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.206.47 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    இந்தியா

    தூத்துக்குடியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.206.47 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    SahabudeenBy SahabudeenNovember 14, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்று பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி வருகை தந்தார்.

    பின்னர் இன்று காலை தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற திமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் 7,893 பயனாளிகளுக்கு, ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்க்கண்டேயன், ஊர்வசி செ.அமிர்தராஜ், மேயர் பெ.ஜெகன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலாளர் மு.பிரதாப், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அ.பிரம்மசக்தி, துணை மேயர் செ.ஜெனிட்டா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Post Views: 114
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.