தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகைய்யா, மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும் இளைஞர் அணி மாநில அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2026 தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் புதியதாக துவங்கப்பட்டுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் மற்றும் எதிர்க்கட்சிகளில் எதிர்ப்பை விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். மேலும் நிர்வாகிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


