பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி கிழக்கு ஒன்றியம் தொழுபெத்தனேந்தல் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் 25 kva புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி மின் பொறியாளர் செல்லதுரை மற்றும் பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுபேக ஆறுமுகம், கிளைக் கழகச் செயலாளர்கள் நாகலிங்கம், சந்திரன், சோனை, முத்து, சம்பத் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
