Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
    இந்தியா

    ஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

    SahabudeenBy SahabudeenNovember 20, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). வழக்கறிஞரான இவர் ஓசூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வழக்கறிஞரை வெட்டிய ஆனந்தன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் இருந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

    கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது.

    நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

    வழக்கறிஞரை வெட்டிய ஆனந்தன், வேறொரு வழக்கறிஞரின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கண்ணனை வெட்டியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த வெட்டு காயம் விழுந்துள்ளது. கோர்ட்டு வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பொதுமக்களும் வழக்கறிஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஓசூரில் கோர்ட்டு வளாகத்திலேயே இளம் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ரமணி (வயது 26) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 148
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.