செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர் வாடிக்கையாளர்களிடம் மரியாதை இன்றி தரக்குறைவாக நடந்து கொள்கிறார். இதுபோல் தொடர்ந்து வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர் வாடிக்கையாளர்களை தர குறைவாக நடத்துவதால் வாடிக்கையாளர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வங்கியின் மேலாளர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார். என்று வாடிக்கையாளர்கள் மனவேதனையுடன் தங்கள் கருத்துகளை வருத்தத்துடன் கூறுகிறார்கள்.


