Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 27.12.2025 அன்று, திருத்தணி ரெயில்வே குவார்ட்டர்ஸ் அருகே ஒரு நபர், ஒரு சில நபர்களால் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஒடிசாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் திருத்தணி காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான மருத்துவ உதவி வழங்கப்பட்டது. விசாரணையில் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பதிவேற்றும் நோக்கத்துடன் சட்டத்துடன் முரண்படும் வகையில் நான்கு சிறுவர்கள் (CCLs) இந்த குற்றத்தைச் செய்துள்ளனர். குழுக்கள் அமைக்கப்பட்டு, இறுதியாக, நான்கு சிறுவர்களும் 28.12.2025 அன்று கைது செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தில் (JJB) ஆஜர்படுத்தப்பட்டனர். நான்கு சிறுவர்களில் மூன்று பேர் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் ஒரு சிறுவன், சிறார் நீதி வாரியத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தகுந்த மற்றும் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளனர், மேலும் இந்த வழக்கில்…
ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என கூறியிருந்தார். இந்த நிலையில், நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். முன்னதாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு பூமிபூஜை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வானத்தில் ஒரே சந்திரன்தான். அது போல் பூமியில் ஒரே ஒரு ராமச்சந்திரன்தான். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. நடிகர்களை பார்க்க கூட்டம் கூடுவார்கள். விஜய் நடிகர் என்பதால் மற்ற நடிகரை விட கொஞ்சம் கூட்டம் அதிகமாக கூடுகிறது. இவரை விடவடிவேலு, நயன்தாராவுக்கு கூட்டம் கூடும். அ.தி.மு.க. களத்தில் இல்லை எனக்கூற எவ்வளவு தைரியம்? அ.தி.மு.க. களத்தில் இருக்கிறமோ இல்லையா…
ஆங்கில புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 30/12/2025 (செவ்வாய் கிழமை), 31/12/2025 ( ), 01/01/2026 (வியாழக்கிழமை) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/12/2025 (செவ்வாய்கிழமை) அன்று 240 பேருந்துகளும், 31/12/2025 (புதன்கிழமை) அன்று 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/12/2025 மற்றும் 31/12/2025…
திருப்பூரில் நடைபெறும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் கனிமொழி எம்.பி. பங்கேற்று, அனைவரையும் வரவேற்று பேசியதாவது:- அன்கன்ட்ரோலபுள் முதல்- அமைச்சர் என அனைவராலும் அழைக்கப்படும் முதல்- அமைச்சருக்கு வணக்கம். எல்லோரும் பாராட்டக்கூடிய, எதிரிகள் அச்சப்படக்கூடிய முதல்-அமைச்சர். மாநாட்டு ஏற்பாடுகளை செந்தில் பாலாஜி மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். பெண்களுக்கான ஆட்சியை, பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியை நடத்தும் முதல்-அமைச்சருக்கு நன்றி. உங்களிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம் என்பதற்காக அரசமைப்பு புத்தகம் பரிசளித்தோம். தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்த நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முதல்-அமைச்சருக்கு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.30 கோடி சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப்படுகிறது. கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை இந்த சகோதரிகள் சொல்வார்கள். உயர்கல்விக்கு செல்லக்கூடிய பெண்கள் சராசரியில் நாம் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக இருக்கிறோம். பாதுகாப்பான மாநிலம் என்பதால் அதிகமாக வேலைக்கு போகும் பெண்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ளது…
மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக திருச்சியில் (30-12-2025) பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. அந்த சில (30-12-2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், 2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம் நெய்வேலி,கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி ஆகிய இடங்கள். துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிபட்டி, உடையாம்பட்டி,திருப்பஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகோட்டம், காளவாய்பட்டி, பூணாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு மற்றும் புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லாயம்பட்டி ஆகிய பகுதிகள் மின்தடை.
பள்ளி மாணவர்கள் தற்போது அரையாண்டு விடுமுறையில் உள்ளனர். கடந்த 24-ந்தேதி தொடங்கிய அரையாண்டு விடுமுறை வருகிற ஜனவரி 4-ந் தேதியுடன் முடிவடைகிறது. 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 5-ந் தேதி பள்ளிகள் வழக்கம் போல் தொடங்கும். இதனிடையே, புத்தாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதாவது, ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை தொடங்குகிறது. 15-ந்தேதி பொங்கல், 16-ந்தேதி திருவள்ளுவர் தினம், 17-ந் தேதி சனிக்கிழமை உழவர் தினம், ஞாயிறு விடுமுறை தினம் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. பின்னர் குடியரசு தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விடுமுறை அனைத்து அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிர்வாகி அஜிதாவுக்கு என்னாச்சு? தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, அஜிதா ஆக்னல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகியாக இருக்கும் நிலையில், இவருக்கு சமீபத்தில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு சென்று த.வெ.க தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 25-ந்தேதி அஜிதா ஆக்னல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அஜிதா ஆக்னலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அவசர சிகிச்சை வார்டுக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு அவருக்கு மருத்துவர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அரசியல் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 140-ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று நாடெங்கிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) சார்பில் திருவனந்தபுரத்திலுள்ள மாநில கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் நிறுவன நாள் கொண்டாட்டம்நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, தீபா தாஸ் முன்ஷி, பாலோடு ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கட்சித் தலைமையகத்தில் கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது, ஒலிபெருக்கியில் தேசிய கீதத்தைப் பாடிய காங்கிரஸ் கட்சியைச் சேந்த பெண் நிர்வாகி ஒருவர், யாரும் எதிர்பாராதவிதமாக தேசிய கீதத்தை தவறாகப் பாடினார். அப்பாடலின் முதல் வரியைப் பிழையாக அவர் உச்சரிக்க அங்கு குழுமியிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதைப் பொருட்படுத்தாமல் பின்னணியில் தொடர்ந்து பாடினர். இந்தக் காட்சி அங்கு எடுக்கப்பட்ட விடியோவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு…
தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள சீமானுக்கு எதிரான கண்டன அறிக்கையில் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய சமூக நீதித் தலைவர்களை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தி ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக அரசியல் கட்சி நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமா எம் பி அவர்கள் சீமானையும் தவெக கட்சி தலைவர் விஜயையும் பொதுக் கூட்ட மேடையில் இவர்கள் இருவரும் ஆர் எஸ் எஸ் ன் மூலம் பிறந்த கைக்குழந்தைகள் என விமர்சன வைத்திருந்தார் இந்த விமர்சனத்தின் பொருள் என்னவென்றால் ஆர்எஸ்எஸ் பாஜக அரசியலின் குழந்தை என பதிலாகும் ஆனால் இதை கூட புரிந்து கொள்ளாமல் அரசியலில் அரவேக்கட்டுத்தனமாக பேசி வரும் சீமான் அவர்கள் தம்மையும் விஜயையும் தோழர் திருமா அவர்கள் தான் பிரசவம்…
தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40க்கு பதில் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் இரவு 9.05 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 6:23 மணிக்கு தாம்பரம் செல்லும், காலை 7:35 மணிக்கு எழும்பூர் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

