Author: Sahabudeen

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா(வயது 57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் இடத்தில் படுத்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூங்கிக் கொண்டிருந்த நிதின், அப்படியே உருண்டு கீழே விழுந்துள்ளார். 10-வது மாடியில் இருந்து விழுந்த அவர், 8-வது மாடியில் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், நிதின் ஆதியாவை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 10-வதுமாடியில் இருந்து விழுந்த நபர், ஜன்னல் கம்பியில் சிக்கி அதிசயமாக உயிர்தப்பிய…

Read More

இருந்த 5 பேர் பலி, 35 பேர் காயம் நைஜீரியா நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் மைதுகுரி பகுதியில் கேம்போரு சந்தை பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நேற்றிரவு தொழுகை நடந்து கொண்டிருந்தது. இதற்காக மக்கள் அதிக அளவில் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் மாலை வேளைக்கான தொழுகையை நடத்தி கொண்டிருந்தபோது, மசூதிக்குள் திடீரென தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், பலர் சிக்கி கொண்டனர். அந்த பகுதியே தூசு பரவி புகை மண்டலம் போன்று காட்சியளித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 35 பேர் காயம் அடைந்தனர். சம்பவ பகுதியில் தற்கொலை தாக்குதலுக்கான கவச உடைகள் சிதறி கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். அதனை பார்த்த சாட்சிகளும் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று உறுதிப்படுத்தினர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன என்று போர்னோ மாகாணத்திற்கான காவல்…

Read More

திருச்சியில் இருந்து சென்னை கடலூர், நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில் இன்றிரவு சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில், பஸ் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கியது. அது தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் சென்று, எதிரே வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2 கார்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போய் விட்டன. விபத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டனர். காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதனால், சென்னையில் இருந்து திருச்சி செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், சிகிச்சை பெற்ற 2…

Read More

நாசரேத் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நாசரேத் நகர கழகம் சார்பில்மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மற்றும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ஆகியோர் தலைமையில் நாசரேத் கே.வி.கே. சாமி சிலை அருகில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நாசரேத் பெரியதுரை,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் மற்றும் நகர அம்மா பேரவை செயலாளர் தினகரன்,நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன், நகர மாணவரணி செயலாளர் அர்ஜுன் சங்கர்,நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திருமலைவாசன், கவுன்சிலர் ரவீந்திரன், அவைத் தலைவர் சிவசுப்பு,எம் ஜி ஆர் மன்ற எம்ஜிஆர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, இணை செயலாளர் ஞானயா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற…

Read More

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, திருடன் என சந்தேகித்து கிராம மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா என கேள்வி எழுப்பி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே, வாழையார் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் கடந்த 17ஆம் தேதி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த கிராம மக்களுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சிலர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையின் போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்ஆத்திரமடைந்த கும்பல் அந்த நபரை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயர் ராம்நாராயணன் பாஹேல் என்பதும், அவருக்கு வயது 31 என்பதும் தெரியவந்தது. அவர்…

Read More

தமிழக அரசியலில் மதச்சார்பற்ற அரசியலின் மையமாக விளங்கும் திமுக தலைமையிலான கூட்டணியில், ஏற்கனவே காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,விடுதலை சிறுத்தைகள. கட்சி,மனிதநேய மக்கள் கட்சி (மமக), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML), மஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் கணிசமான ஆதரவையும், செயல்வீரியமுள்ள படையையும் கொண்டுள்ள எஸ்டிபிஐ கட்சியும் இந்த கூட்டணிக்குள் இணைந்தால், அது அரசியல் ரீதியாக கூடுதல் பலத்தை வழங்கும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக நீதி, சிறுபான்மை பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் போன்ற விவகாரங்களில், திமுகவும் எஸ்டிபிஐயும் ஒத்த கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமீப காலமாக பல பகுதிகளில் திமுக மற்றும் எஸ்டிபிஐ தலைவர்கள் ஒரே மேடைகளில் தோன்றுவதும், பரஸ்பர நெருக்கம் அதிகரிப்பதும், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.திமுகவின் அரசியல் நகர்வுகளை ஆதரித்து அறிக்கை வெளியிடுவதை பார்க்க முடிகிறது. எஸ்டிபிஐ கட்சியின்…

Read More

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் தாக்கல்செய்த வழக்கில், எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் சட்டப்படி தவறானது என்றும், சிறார் நீதிச் சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், வாழ்க்கையை அழித்துவிடும் என்றும் வேதனை தெரிவித்தார்.மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், புத்தாண்டு நெருங்கும் நிலையில் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களில் குழந்தைகள்…

Read More

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலைக் கண்டித்து மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் திருமாவளவன் பேசியதாவது:- திருப்பரங்குன்றம் விவகாரம் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம். எப்படியாவது மதப்பிரச்சினையை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றனர். பாஜகவின் ஜம்பம் பீகாரில், உத்தரபிரதேசத்தில் பலிக்கலாம். தமிழ்நாடு தனித்தன்மை வாய்ந்த மாநிலம். தமிழ்நாட்டில் உங்கள் ஜம்பம் பலிக்காது.பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழகத்தில் நுழைய முடியாது. திமுகவை ஒரு தீய சக்தி என்று விஜய் சொல்கிறார். அவர் முடிந்தால் திமுகவை அழித்து விட்டு போகட்டும். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. விஜய் ஆர்எஸ்எஸ்க்காக கட்சி தொடங்கியுள்ளார். அவர்கள் திமுகவோடு பெரியார், அம்பேத்கர் கொள்கைகளையும் அழிக்க பார்க்கிறார்கள். விஜய் நேரடியாக பைனல் விளையாடி ஆட்சிக்கு வர முயல்கிறார், விஜய்…

Read More

மும்பை, காட்கோபர் பகுதியில் பாஜக எம்எல்ஏ பராக் ஷா என்பவர், ஆட்டோ ஓட்டுநரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆட்டோ ஓட்டுநர் தவறான திசையில் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக எம்எல்ஏ தவறான திசையில் ஓட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை நிறுத்தி, வாக்குவாதத்தின் போது அவரை அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தச் செயலை விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் இந்தச் செயலை விமர்சித்து, X இல் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். “பாஜக எம்எல்ஏக்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாக மாறிவிட்டனர், ஏழை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இதுதான் பாஜகவின் உண்மையான முகம் என விமர்சித்துள்ளார்.

Read More

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது. நாசரேத் யோவான் பேராலய சபை ஊழியர் ஜெசு செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமையாசிரியர் குணசீலராஜ் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம், விலங்கியல் முதுகலை ஆசிரியை வத்சலா மேரி, சமூக அறிவியல் ஆசிரியை பால் பத்மஜோதி, அலுவலக முதன்மையாளர் மெர்சி ஜாஸ்மின் ஆகியோர் வேத பாடங்கள் வாசித்தனர். ஆசிரிய, ஆசிரியைகள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்களைப் பாடினர். பேராலய உதவிகுரு தனசேகர் ராஜா கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை யாவரும் கொண்டாட வேண்டும், எல்லோரையும் நேசிப்போம், எல்லோரையும் உயர்த்துவோம் என்று தனது அருளுரையில் செய்தி வழங்கினார். ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. கீத ஆராதனையில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும், பாடகர் குழுவினருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது. விழாவின் முடிவில், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், ஆசிரியர்கள்…

Read More