Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய விவகாரத்தில் 23 ஆண்டுகளாக நீடித்த குழப்பத்திற்கும், நீண்ட போராட்டத்திற்கும் தீர்வு காணும் விதமாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) மிகவும் வரவேற்கத்தக்கது. ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், அமைச்சர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தப் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, அரசு…
கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்புதிட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற உலகம் உங்கள் கையில் என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தின்…
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னையில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சாலை மறியல், கண்களில் கருப்பு துணி கட்டியவாறும் பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் அருகேஉள்ள சிவானந்தா சாலையில் நேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 10-வது நாளாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் அணிந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி 311 -ஐ நிறைவேற்றக்கோரிய அட்டைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் கயிறுகளை தடுப்புகளாக ஏற்படுத்தி அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டத்தில் ஈடுபடும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மனித சங்கிலிபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர், மாலை…
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம்கண்டன ஆர்ப்பாட்டம்….. தமிழகத்திலேயே சிறப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு பலஆயிரக்கணக்கான கோடி மதிப்பீட்டில் மக்கள் நலதிட்டங்களை வழங்கிய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. கே.என். நேரு அவர்களின் செயல்பாட்டை முடக்குகின்ற மோடி அரசின் ஏவல்துறையான அமலாக்கத்துறையை கண்டித்தும். வகையில் பொய் வழக்குபோட துடிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியபடி முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீபட்டை அதிகப்படுத்தி வழங்காத மாண்புமிகு.முதலமைச்சர், தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி வழங்கக்கோரியும்,திருப்பரங்குன்றத்தில் இந்து, முஸ்லிம் மதமோதலை ஏற்படுத்தத் துடிக்கும் பாஜகவினரை கண்டித்தும், அதற்கு துணை போகின்ற வகையில் நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய நீதிபதி சுவாமிநாதனை கண்டித்தும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திப்பார்களை நிறைவேற்ற முடியாது எனக்கூறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், உடனடியாக நிறைவேற்றக்கோரியும், திருச்சி பஞ்சப்பூர் பஸ்நிலைய திறப்பு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் ஃபியூச்சர் சாம்பியன் அகடமியில் பயின்ற 8 மாணவர்கள் தங்கம் பதக்கமும் 6 மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சென்னை இரயில் நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். கோவா மாநிலம் காலிகெட் பகுதியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த ஃபியூச்சர் சாம்பியன் அகடமியில் பயின்ற மாணவர்கள் நிறுவனரும், பயிற்ச்சியாளருமான ரங்கராஜன் தலைமையில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர் தங்கபதக்கம் பெற்று முதல் பரிசும் 6 வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் பரிசு வென்று வெற்றிபெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ந்ந்துள்ளனர். சென்னை இரயில் நிலையம் வந்த கராத்தே வீரர் வீராங்கனைகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை அணிவித்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஃப்யுச்சர் அகடமியின் நிறுவனர் ரங்கராஜன் பேசுகையில் கோவா மாநிலம் காலிகெட் பகுதியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் 200 க்கும்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலைகூடத்தில் பயின்ற மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெங்கலம் பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாணவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.கோவா மாநிலம் காலிகெட் பகுதியில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலைக்கூடத்தில் பயின்ற 12 மாணவர்கள் பயிற்ச்சியாளர் கிறிஸ்டீனா தலைமையில் போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளுடன் நடைபெற்ற போட்டியில் 5 தங்கபதக்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெங்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். சென்னை இரயில் நிலையம் திரும்பிய வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்ச்சியாளர் கிறிஸ்டீனா பேசுகையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலை கூடத்தில் பயின்ற எனது மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசு…
பள்ளிகரனை மாயா அகடமியில் யோக, சிலம்பம், கராத்தே பயிற்ச்சி பெற்ற மாணவர்கள் கோவாவில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு போட்டியில் பயிற்ச்சியாளர் முருகன் தலைமையில் 86 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பல்வேறு நாடுகளுடன் நடைபெற்ற சாம்பியஷிப் போட்டிகளில் வெற்றிபெற்று 41 தங்கம், 22 வெள்ளி, மற்றும் சான்றிதழ், கோப்பைகளுடன் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையம் திரும்பிய 86 வீரர், வீராங்கனைகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை, பூங்கொத்து வழங்கி உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்ச்சியாளரும், மாயா அகடமியின் நிறுவனருமான முருகன் பேசுகையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே, சிலம்பம், யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லந்து, சிங்கபூர், மலேஷியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 நான்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் போட்டியிட்ட மாயா அகடமியை சேர்ந்த 86 மாணவர்கள் வெற்றிபெற்று 41 பேர் தங்கம், 22 பேர் வெள்ளி பதக்கமும் பெற்று…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு போட்டியில் வேங்கை வாசலில் உள்ள ட்ரீம் கேச்சர் அகடமியில் பயிற்ச்சி பெற்ற 32 மாணவர்கள் தலைமை பயிற்ச்சியாளரும், ட்ரீம் கேச்சர் அகடமியின் நிறுவனருமான ஷிகான் முத்துகுமார் தலைமையில் கோவாவில் சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். சிங்கபூர், மலேஷியா, தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் 14 மாநிலத்தில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வேங்கை வாசல் ட்ரீம் கேச்சர் அகடமியை சேர்ந்த 32 மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் 10 தங்கபதக்கம், 7 வெள்ளி, 2 வெங்கல பதக்கங்களை வெற்றிபெற்று சென்னை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்தில் உறனவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை அணிவித்தும் பூங்கொத்து வழங்கி உற்ச்சாக வரவேற்பு அளித்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ட்ரீன் அகடமியின் நிறுவனர் ஷிகான் முத்துகுமார் பேசுகையில் எனது…
தமிழக முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வரும் நிலையில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நிர்வாகிகள் மூலம் தொண்டர்களை அழைத்துச் செல்ல சென்றதால் பேருந்து இல்லை என பொதுமக்கள் புகார்.
: அடுத்து நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி..! மும்பையின் கிழக்கு சாண்டாகுரூஸில் புத்தாண்டு தினத்தன்று, 25 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனை அழைத்து, பின்னர் கத்தியால் தாக்கியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்குமறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று காதலனும் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் தனிமையில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின்…

