Author: Sahabudeen

வெளியான முக்கிய தகவல் தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும்…

Read More

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடங்கிய போரானது 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரால் இரு தரப்பிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். எனினும், போர்நிறுத்தத்திற்கான உடன்படிக்கை எட்டப்படாத சூழல் உள்ளது. இதனால், போர் நீடிக்கிறது. ரஷிய அதிபர் புதினின் வீடு நவ்கரோட் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த வீடு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது என ரஷியா திடீரென குற்றச்சாட்டு கூறியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் ரஷியா வெளியிட்டு உள்ளது. ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அந்த வீடியோ பதிவில், ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டது என்று தெரிவித்து உள்ளது. வீடியோவில், 6 கிலோ எடை…

Read More

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் தேசிய கவி என போற்றப்படும் பாரதியாரின் 144வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பாரதியாரின் நினைவு மண்டபத்தில் அனைத்துலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பாரதி எனும் பேராற்றல் தலைப்பில் கவியரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கவிஞர்.பா.பாலசரணன் அவர்களுக்கு பாரதி வழி கவிஞர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்விருதினை தமிழக அரசின் பாரதி விருதாளர் பாரதிசுகுமாரன் அனைத்துலகத் தமிழ்ச் சங்க தலைவர் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை தலைவரும் வழங்கினர்.மற்றும் பாரதி எனும் பேராற்றல் தலைப்பில் எழுதப்பட்ட கவிதை புத்தகம் வெளியிடப்பட்டு பாரதியின் கவிதையும் தேச விடுதலையில் பாரதியின் புரட்சி கவிதைகள் ஆற்றிய பங்கு என்று பாரதி சுகுமாரன் அவர்கள் பேசினார்.

Read More

உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. முன்னதாக 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்தநிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனம்ஓட்டுவதை தடுக்கும் வகையில் மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல, பெண்களிடம் அத்துமீறல், சாலை விபத்து போன்ற விரும்பத்தகாத செயல்களை தவிர்க்க கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு…

Read More

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருவாக்கும். எத்தகைய சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து நமக்காக உழைக்கும் விவசாயிகளின் அர்ப்பனிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை தொழில் துறை வீழ்ச்சி உள்ளீட்ட காரணங்களால் பல இலட்சக்கணகான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறியுடன் பல இளைஞர்கள் காத்திருகின்றனர். முடங்கி கிடக்கும் சிறு குறு தொழில்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டுடெக்காமல் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியாது. ஆளும் அரசுகளின் நடவடிக்கைககளால் மட்டுமே மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான…

Read More

தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பட்டியலின பெண்கள் விடுதியில், ஒரு மாணவியை விடுதி வார்டன் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி, விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவிக்கும், வார்டனுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் பொறுமை இழந்த வார்டன், ஒரு தடியை எடுத்து கொண்டு மாணவியை கண்மூடித்தனமாக தாக்கினார். சக மாணவிகள் அவரை தடுக்க முயற்சித்த போதிலும், வார்டன் இரக்கமின்றி மாணவியை தாக்கினார். இதுதொடர்பான வீடியோ அண்மையில் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், பூபாலப்பள்ளி மாவட்ட ஆட்சிய ரகுல் ஷர்மா, விடுதி வார்டன் பவானியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Read More

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது 4 சிறார்கள் கஞ்சா போதையில் கொடூரமாக தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை ‘ரீல்ஸ்’ என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read More

இதுவரை இணைக்காதவர்கள், இன்றைக்குள் ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றுதான் கடைசி நாளாகும். பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது. இதுவரை இணைக்காதவர்கள், இன்றைக்குள் ஆயிரம் ரூபாய்தாமதக் கட்டணம் செலுத்தி தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு எனவும், இணைக்க தவறினால், பான் எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஒருவேளை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாவிட்டால் பான் எண் செல்லாதது ஆக்கப்படும். இணைக்க தவறினால், வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது எனவும், அதிகப்படியான TDS/TCS பிடித்தம், 15G மற்றும் 15H…

Read More

சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நீலகொண்டமாஜி என்பவர் இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையின் கீழே இறங்க முயற்சி செய்தார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் அவரை எச்சரித்தனர். இருந்த போதிலும் எதையும் காதில் வாங்காத அவர்,இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையில் சினிமா பாணியில் இறங்க முயற்சி செய்தார். அப்போது திடீரென கேபிள் ஒயர் அறுந்து விட்டது. ஒற்றை ஒயரை பிடித்தபடி 60 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். நல்லவேலையாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை அருகே இருந்த போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். சுமார் 60 அடி மேம்பாலத்தின் மீது இருந்து சாகசம் செய்த வாலிபர் மன நலம் பாதிக்கப்பட்டவரா அல்லது சாகசம் செய்யகுதித்தாரா அல்லது குற்றச் செயலில் ஈடுபட்டு தப்பிக்க மேம்பாலத்தின் மீது இருந்து…

Read More

திருப்பூர் அரிசி கடை வீதி வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் காவலர் ஒருவரை கத்தியை கொண்டு குத்துவது போல மிரட்டல் விடுத்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வாலிபர் தன்னை தாக்க வருவதை கண்டு சுதாரித்துக்கொண்ட காவலர் தனது பெல்ட்டை கழற்றி அதன் மூலம் வாலிபர் தாக்காதவாறு தடுத்தார். இதனையடுத்து அங்கிருந்த மற்ற காவலர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து தாக்க வந்த வாலிபர் யார்? எனவும் வாலிபர் போதையில் காவலரை தாக்க முற்பட்டாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.காவலரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ…

Read More