Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான்
    இந்தியா

    அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான்

    SahabudeenBy SahabudeenJune 27, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்களாக நடந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டின்பேரில் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் ‘நேட்டோ’ மாநாட்டில் பங்கேற்ற டிரம்பிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். ” அமெரிக்க தாக்குதலில் ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளதா?” என்று நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு கோபம் அடைந்த டிரம்ப், ”உளவுத்துறை தகவல் இறுதியானது அல்ல. ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அதை சரிப்படுத்த பல ஆண்டுகள் ஆகும்” என்று கூறினார்.”ஈரான் மீண்டும் அணுஆயுத உற்பத்தி பணியில் ஈடுபட்டால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துமா?” என்று கேட்டதற்கு, டிரம்ப் ”நிச்சயமாக” என்று பதில் அளித்தார்.அதே சமயத்தில், அணுசக்தி திட்டங்களை கைவிட மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஐ.நா. சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஒத்துழைப்பதைநிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த உள்ளது.இதற்கிடையே, ஈரானும் அணுசக்தி நிலைய சேதத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்தநிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின் முதல்முறையாக ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி பேசியதாவது:-

    அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம். ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும். கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம். எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு, பாடம் புகட்டியுள்ளோம். தற்போதைய போரில் அமெரிக்காவுக்கு எந்த பலனும் இல்லை. இஸ்லாமிய குடியரசு வெற்றி பெற்றது. மீண்டும் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை செய்தால் எதிரி நிச்சயம் அதிகவிலை கொடுக்க நேரிடம். தேவைப்பட்டால் இதுபோன்றநடவடிக்கைகள் எதிர்காலத்திலும் நிகழலாம்.

    கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை குறிப்பிட்டு காமேனி பேசினார்.

    Post Views: 164
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.