Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பால்ய சிநேகம்… காதலருடன் சேர்ந்து 2 குழந்தைகள், கணவரை 2 முறை கொல்ல முயன்ற மனைவி
    இந்தியா

    பால்ய சிநேகம்… காதலருடன் சேர்ந்து 2 குழந்தைகள், கணவரை 2 முறை கொல்ல முயன்ற மனைவி

    SahabudeenBy SahabudeenJuly 5, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியை சேர்ந்தவர் கோபால் மிஷ்ரா. இவருடைய மனைவி நயினா சர்மா. இந்த தம்பதிக்கு சிராக் (வயது 4) மற்றும் கிருஷ்ணா (ஒன்றரை வயது) என 2 மகன்கள் உள்ளனர்.

    நயினாவுக்கு சிறு வயதில் இருந்தே ஆஷிஷ் மிஷ்ரா என்பருடன் பழக்கம் இருந்து வந்தது. நாளடைவில் இவர்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரித்தது. காதலர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்தனர். இந்நிலையில், நயினாவுக்கு கோபாலுடன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகளும் பிறந்து விட்டனர்.

    ஆனாலும், பழைய காதலை அவரால் மறக்க முடியவில்லை. அவ்வப்போது, காதலர் ஆஷிஷ் மிஷ்ராவை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். அவர்களுடைய கள்ளக்காதலையும் இருவரும் வளர்த்துள்ளனர். இதற்கு கணவர் மற்றும் குழந்தைகள் தடையாக உள்ளனர் என நினைத்த இருவரும் அவர்களை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தனர்.

    இதற்காக சதி திட்டம் தீட்டி அந்த நாளுக்காக காத்திருந்தனர்.

    இதன்படி, முதலில் கடந்த ஜூன் 30-ந்தேதி கோபாலுக்கும், 2 மகன்களுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்றனர். ஆனால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதனால், கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்தி கொலை செய்ய நயினா முயன்றுள்ளார்.

    எனினும், இந்த முயற்சியிலும் கோபால் தப்பி விட்டார். இதனால், 2-வது தடவையாக கணவரை கொலை செய்ய நயினா திட்டம் தீட்டினார். இந்த முறை, கோபால் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது, தலையணையால் அமுக்கியும், கத்தியால் குத்தியும் கொல்ல முயன்றனர்.

    இந்த முறையும் தப்பி பிழைத்த கோபால், கத்தி கூச்சலிட்டு உள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். எனினும், நயினாவும், ஆஷிஷ் மிஷ்ராவும் யாரிடமும் சிக்காமல் அப்போது தப்பி விட்டனர்.

    இதனை தொடர்ந்து, பஹ்ஜோய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், நயினா மற்றும் ஆஷிஷ் ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இதுபற் விசாரணை நடந்து வருகிறது.

    Post Views: 455
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.